செய்தி தொடர்பாளர்கள் பதவிக்கு நேர்முகம், எழுத்துத் தேர்வு

லக்னோ:
செய்தி தொடர்பாளர்கள் பதவி வேண்டுமா? அப்போ நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் பாஸ் செய்யணும் என்று அதிரடித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

உ.பி., யில் செய்தி தொடர்பாளர்களை மாற்றும் பணியில் காங்., ஈடுபட்டுள்ளது. கட்சியில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பதவி அளிக்க வேண்டும் என்பதற்காக நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வைத்து செய்தி தொடர்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

செய்தி தொடர்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் அளித்துள்ளவர்களின் 14 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றில் சில அடிப்படை கேள்விகளும், சில கடினமான கேள்விகளும் அடங்கும். உதாரணமாக, அடிப்படை கேள்விகள் பிரிவில், மோடி அரசின் தோல்விகளுக்கு முக்கிய காரணங்களை பட்டியலிடுங்கள்.

உ.பி.,யில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன என்பவையாகும். கடினமான கேள்விகள் பிரிவில், உ.பி., மாநிலம் எத்தனை உட் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

உ.பி., காங்., கட்சி தலைவர் ராஜ்பாபர், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் செய்தி தொடர்பாளர்களுக்கான நேர்முக தேர்வை நடத்தி வருகின்றனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சி பதவிக்கு இப்படி தேர்வு நடத்துவது புதுமையாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!