சைகை மொழியின் தந்தையின் 306வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது

சைகை மொழியின் தந்தை என்று அழைக்கபடும் சார்லஸ் மைக்கல் திலேப்பின் 306வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.

காது கேளாதோர் பிறரின் உதடு அசைவை கொண்டு அவர்கள் பேசுவதை கணிப்பார்கள். ஆனால், அவர்களின் மொழியை பிறர் புரிந்து கொள்வதற்கு என உருவாக்கப்பட்டதே சைகை மொழி. அத்தகைய சைகை மொழியை வெர்சைல்சில் பிறந்து வளர்ந்த சார்லஸ் மைக்கல் திலேப் என்பவர் முதன் முதலில் உருவாக்கினார். ஒருமுறை சார்லஸ் குடிசைப்பகுதிக்கு சென்றப்போது இரண்டு சகோதரிகள் சைகை மொழிகளில் பேசுவதை கண்டார். அதனை பார்த்த சார்லஸிற்கு ஒரு யோசனை தோன்றியது.

காதுகேளாதோருக்காக ஏன் சைகை மொழியை கொண்டு செல்லகூடாது என சார்லஸ் எண்ணினார். பின்னாளில் சைகை மொழியை கற்றுத்தரும் வகையில் காது கேளாதோருக்காக தனிப்பள்ளி ஒன்றையும் சார்லஸ் தொடங்கினார். அந்த பள்ளியில் காது கேளாதோருக்காக பல சலுகைகள் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக சைகை மொழியின் தந்தை என சார்லஸ் தனது 77வது வயதில் 1789ம் ஆண்டு மறைந்தார். அவரின் 306 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை பெருமைப்படுத்தும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் பிரத்யேகமான டூடுள் வெளியிட்டுள்ளது.

Sharing is caring!