சொத்துக்களை பறிமுதல் செய்யலாம்… சிறப்பு நீதிமன்றம் அனுமதி
மும்பை:
சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், தன் பேச்சால், பயங்கரவாத நடவடிக்கைகளை துாண்டியதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து அவர் மலேஷியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில், ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான, மும்பையில் உள்ள நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S