சோக்சியின் சொத்துக்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அறிவிப்பு

புதுடில்லி:
வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த சோக்சி உள்ளிட்டோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைவன், மெஹுல் சோக்சி உள்ளிட்டோரின் 218 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவன் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைவனுமான, மெஹுல் சோக்சியும், 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.

இது தொடர்பாக, சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையின் மும்பை மண்டல அலுவலகம், மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் படி, மெஹுல் சோக்சி, நிரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளி, மிஹிர் பன்சாலி மற்றும் ஏ.பி.ஜெம்ஸ், ஜுவல்லரி பார்க் ஆகிய நிறுவனங்களின், 218 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!