சோதனை குழாய் மூலம் பிறந்த குழந்தைகளின் மரபணுவில் மாற்றம்

பீஜிங்:
எச்.ஐ.வி., பாதிப்புக்கு ஆளாகாத வகையில் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இங்கல்ல… சீனாவில்தான். அதுவும் சோதனை குழாய் மூலம்.

சீனாவில், சோதனை குழாய் மூலம் பிறந்துள்ள, இரட்டை பெண் குழந்தைகள், எச்.ஐ.வி., பாதிப்புக்கு ஆளாகாத வகையில், அதன் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டை சேர்ந்த ஆய்வாளர், ஹீ ஜியான்கூயி தெரிவித்துள்ளார்.

”குழந்தை பிறப்புக்கு முன்பே, மரபணுவில் மாற்றம் செய்து, எதிர்காலத்தில், அந்த குழந்தைக்கு, எச்.ஐ.வி., தாக்கம் ஏற்படாத வகையில் செய்யப்பட்டுள்ளது, உலகிலேயே இது தான் முதல் முறை,” என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!