சோமாலியாவில் பிளாஸ்டிக்குக்கு தடை

சோமாலியாவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பயங்கரவாத அமைப்பான ‘அல் ஷபாப்’ பயங்கரவாத அமைப்பு அதிரடியாக அறிவித்து உள்ளதுநாடு முழுவதும் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைகளை விதிக்கப்பட்டு வரும் நிலையில், வறுமை தாண்டவமாடும் சோமாலியாவிலும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தின் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையை சோமாலியா அரசு விதிக்கவில்லை. அரசுக்கு எதிராக போராடி வரும் ‘அல் ஷபாப்’ என்ற பயங்கரவாத அமைப்பு விதித்துள்ளது.

இந்த அறிவிப்பை அல்ஷபாப் அமைப்பினர் அந்நாட்டு வானொலி மூலம் அறிவித்து உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளையும் அச்சுறுத்துகிறது. எனவே மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதிப்பதா க அறிவித்துள்ள அந்த அமைப்பு, நாட்டில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

பயங்கரவாத அமைப்பு ஒன்று இயற்கையை நேசிக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அறிவிப்பு வெளியிட்டிருப்பது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

Sharing is caring!