சோளத்தட்டை படப்புக்கு தீவைத்த மர்மநபர்கள்… போலீஸ் விசாரணை

திண்டுக்கல்:
சோளத்தட்டை படப்புக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குஜிலியம்பாறை அருகே பொம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமன் (34). விவசாயி. இவர் கால்நடை தீவனமான சோளத்தட்டையை வீட்டின் அருகே சிறிது தூரத்தில் அடைத்து வைத்திருந்தார்.

இந்த சோளத்தட்டை படப்பில் திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட ராமன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை. தொடர்ந்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் சோளைத்தட்டை படப்பு முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ராமன், குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்தார். அதில் தனது சோளத்தட்டை படப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!