ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துள்ளானது

ஜகர்த்தா:
பயணிகள் விமானம் பெருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேஷியாவில் ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது.

ஜகர்த்தாவில் இருந்து பங்கக்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லையன் ஏர் விமானம், புறப்பட்ட 13 நிமிடங்களில் நடுவானில் மாயமானது. காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து மாயமான விமானத்தை தேடிய போது, அது இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

210 பேர் பயணிக்கும் வசதி கொண்ட 737 போரிங் ரக விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார் என்ற விபரம் தெரியவில்லை. மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!