ஜனாதிபதி உயிரிழந்து விட்டதாகவும் அவரைப் போன்ற ஒருவரே தற்போது உயிருடன் இருக்கிறார்

ஜனாதிபதி உயிரிழந்து விட்டதாகவும் அவரைப் போன்ற ஒருவரே தற்போது உயிருடன் இருக்கிறார் எனவும் வௌியாகியுள்ள வதந்திகளை, நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி மறுத்துள்ளார்.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளேன் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இது நான் தான் என்பதை உறுதிப்படுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து சுகவீனமுற்றிருக்கும் 75 வயதான முஹம்மது புஹாரி, 2019ஆம் ஆண்டு பெப்ரவரி நடைபெறவுள்ள தேர்தலில் ​போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், பிரித்தானியாவில் கடந்த வருடம் 3 மாதங்கள் வரையில் மருத்துவ விடுமுறையில் இருந்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி முஹம்மது புஹாரி உயிரிழந்து விட்டதாக பதிவுகள் கடந்த வருடம் முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. குறித்த பதிவுகள் 500,000க்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன.

Sharing is caring!