ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும்… திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:
நீட் விலக்கிற்கான தமிழக அரசின் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

நீட் விலக்கிற்கான தமிழக அரசின் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும். மாநில மொழிகளிடம் பா.ஜ., காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.

அடுத்த நீட் தேர்வு வெளியிடுவதற்குள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை போல், மீண்டும், நடக்கவேண்டும். இதற்கான சூழலை உருவாக்க தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!