ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்னிால் பதவி நீக்கம்
அமெரிக்க சட்டமா அதிபர் ஜெஃப் செஸன்ஸ் (Jeff Sessions), அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்னிால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சட்டமா அதிபர் ஜெஃப் செஸன்ஸின் சேவைக்கு நாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவரை வாழ்த்துவதாகவும் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஜெஃப் செஸன்ஸிற்குப் பதிலாக உயர்மட்ட அதிகாரியான மெத்தியூ விடாகெர் (Matthew Whitaker), சட்டமா அதிபராக செயற்படுவார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டமை தொடர்பான வௌ்ளை மாளிகையின் விசாரணைகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்ட ட்ரம்ப், தொடர்ச்சியாக சட்டப்பிரிவின் உயரதிகாரிகளை விமர்சித்து வந்தார்.
இதன் பின்புலத்திலேயே ஜெஃப் செஸன்ஸின் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.
அதேநேரம், மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, தங்களது வேண்டுகோளின் பெயரில் நான் எனது இராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கிறேன் என திகதி இடப்படாத கடிதம் ஒன்றையும் ஜெவ் செஸன்ஸ் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.