ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர்

புதுடில்லி:
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு டில்லி திரும்பினார் பிரதமர் மோடி.

இரண்டு நாள் பயணமாக, கிழக்கு ஆசிய நாடான ஜப்பானுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பினார். டில்லி விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

அவரது இப்பயணத்தில் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே, யோகா, ஆயுர்வேதம் உட்பட, ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜப்பான் பிரதமர், ஷின்ஸோ அபே உடனான, இரு தரப்பு பேச்சுக்கு முன், பல ஜப்பான் தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ஜப்பான் வெளியுறவு அமைச்சர், டாரோ கோனோ, ஆளும், ‘லிபரல் டெமாக்கிரடிக்’ கட்சியின் பொதுச் செயலர், தோஷிஹிரோ நிகாய் உள்ளிட்டோரையும் மோடி சந்தித்தார்.

இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!