ஜப்பான் பிரதமருடன் இந்திய பிரதமர் முறையில் பேச்சு வார்த்தை

டோக்கியோ:
ஜப்பான் பிரதமருடன், இந்திய பிரதமர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

இன்று நடக்கும் இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 13வது ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றார். விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், பியூஜி மலையடிவாரத்தில் அமைந்துள்ள யமனாகி நகருக்கு சென்றார்.

அங்கு, மோடியை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கட்டியணைத்து வரவேற்றார். தொடர்ந்து காதியில் தயாரிக்கப்பட்ட படிகக்கல் கிண்ணங்கள், மரத்திலான பெட்டகம் மற்றும் ராஜஸ்தானின் பாரம்பரிய தரைவிரிப்புகளை , மோடி, ஜப்பான் பிரதமருக்கு பரிசாக அளித்தார்.

பின்னர் அந்த நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரோபோட் தயாரிப்பு தொழிற்சாலையை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு ரோபோட்களின் வகைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தலைவர்களும் அதிகாரப்பூரவமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், இந்திய சமுதாயத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!