ஜமால் கஷோகியைக் கொலை செய்யுமாறு சவுதி அரேபிய மன்னர் மொஹமட் பின் சல்மான் உத்தரவிட்டிருக்கலாம்

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்யுமாறு சவுதி அரேபிய மன்னர் மொஹமட் பின் சல்மான் உத்தரவிட்டிருக்கலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA நம்புவதாக, அந்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

குறித்த கொலை தொடர்பிலான ஆதாரங்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளதாக அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கொலைக்கு புகை வௌியேற்றக்கூடிய துப்பாக்கிகள் எவையும் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், இவ்வாறான நடவடிக்கை ஒன்றுக்கு மன்னரின் ஒப்புதல் அவசியமானது எனவும் புலனாய்வு அமைப்பு அனுமானித்துள்ளது.

இருப்பினும், குறித்த குற்றச்சாட்டுக்களை சவுதி அரேபியா மறுத்துள்ளதுடன், கொலைக்கான திட்டங்கள் தொடர்பில் மன்னருக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!