ஜம்மு காஷ்மீரில் தனியார் வங்கி பொதுத்துறை வங்கி அதிரடியாக மாற்றம்

ஸ்ரீநகர்:
தனியார் வங்கி பொதுத்துறை வங்கியாக மாற்றப்பட்டுள்ளது. இங்க இல்லீங்க. ஜம்மு காஷ்மீரில்..!

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜெ அண்டு கே வங்கி என்ற தனியார் வங்கியை, பொதுத்துறை வங்கியாக மாற்றி அந்த மாநில கவர்னர் சத்யபால் மாலிக் நடவடிக்கை எடுத்துள்ளார்.

காஷ்மீர் சட்டசபை கலைப்புக்கு பிறகு, கவர்னர் எடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கை இது தான் ஜெ அண்டு கே வங்கி இதுநாள் வரை, ‘பழைய தனியார் வங்கி’ என்ற அந்தஸ்தில் செயல்பட்டு வந்தது. இந்த வங்கியில், காஷ்மீர் மாநில அரசுக்கு 59.3 சதவீத பங்குகள் உள்ளன.

இருப்பினும் தொடர்ந்து தனியார் வங்கியாகவே செயல்பட்டு வந்தது. இந்த வங்கிக்கு 2017 -18 ம் ஆண்டில் 7,116.71 கோடி வருவாயும், ரூ.440.90 கோடி லாபமும் கிடைத்துள்ளது.

இது நாள் வரை ரிசர்வ் வங்கி மட்டுமே இந்த வங்கியை கண்காணித்து வந்தது. சட்டசபை கலைப்புக்கு பிறகு மாநில நிர்வாக கவுன்சில் கூட்டம், கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையில் நடந்தது. இதில் தான் ஜெ அண்டு கே வங்கியை, பொதுத்துறை வங்கியாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது இந்த வங்கிக்கு இருந்து வந்த தன்னாட்சி அந்தஸ்து பறிபோகி விட்டது. இனிமேல், மாநில சட்டசபைக்கு இந்த வங்கி பதில் சொல்லியாக வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும், மத்திய கண்காணிப்பு கமிஷன் கட்டுப்பாட்டின் கீழும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக கட்டுப்பாட்டின் கீழும் இந்த வங்கி கொண்டு வரப்பட்டுள்ளது.

கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!