ஜல்லிக்கட்டு விழாவை பார்க்க மாடம் அமைக்கும் பணி தொடக்கம்

அலங்காநல்லுார்:
பார்வையாளர்கள் கூடுதலாக அமர மாடம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

பாலமேடு மஞ்சமலை ஆற்றில் ஜல்லிகட்டு வாடிவாசல் அருகில் கூடுதல் பார்வையாளர்கள் அமர மாடம் அமைக்கும் பணி துவங்கியது.
ஜல்லிகட்டு நடக்கும் போது பார்வையாளர்கள் அமர இடபற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பாலமேடு கிராமமக்களும், ஜல்லிகட்டு ஆர்வலர்களும் பார்வையாளர் மாடம் அமைக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கும், எம்.எல்.ஏ., விற்கும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சோழ வந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம் மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மஞ்சமாலை ஆற்றுதிடலில் பார்வையாளர் மாடம் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜையுடன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி, சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் ராம்குமார், ஜல்லிகட்டு கிராம கமிட்டி நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!