ஜாமீன் கொடுக்காதீங்க… கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுங்க…”

புதுடில்லி:
எங்கள் கஸ்டடியில் விடுங்க… விடுங்க… என்று கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளது சிபிஐ. என்ன விஷயம் தெரியுங்களா?

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.ஐ., கோர்ட் அனுமதி கேட்டுள்ளது.

ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. குறிப்பாக ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனம் 2006ம் ஆண்டில் வாங்கியது.

ரூ. 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் FIPB ஒப்புதல் அளித்தபோது சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தார். சிதம்பரம் கீழ் செயல்பட்ட அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சி.பி.ஐ., பல கட்ட சோதனை நடத்தியது. சமீபத்தில் கார்த்தி கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். ப.சிதம்பரமும் தம்மை சி.பி.ஐ., கைது செய்யக்கூடும் என்பதால் அவர் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லி பாட்டியாலா கோர்ட்டில் இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ., அளித்துள்ள பதில் மனுவில்; அதிகாரத்தில் இருந்தவர்கள் என்பதால் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை. சிதம்பரம், கார்த்தி ஆகிய இருவரையும் கஸ்டடியில் வைத்து விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும். இதனால் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க கூடாது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!