ஜாமீன் கொடுங்க… சிகிச்சை எடுக்கணும்… கோர்ட்டில் லாலு மனு

ராஞ்சி:
ஜாமீன் கொடுங்க… ஜாமீன் கொடுங்க என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

கால்நடை தீவனம் தொடர்பான மூன்று ஊழல் வழக்குகளில் தன்னை ஜாமீனில் விட வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் , ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார்

லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது கால்நடை தீவனங்கள் வாங்குவதற்காக தியோகார்க், தும்கா, சாய்பாசா ஆகிய மூன்று மாவட்ட கருவூலங்களில் பணம் எடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 ஊழல் வழக்குகளில் தனி தனியாக சிறை தண்டனை பெற்று ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்காக சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் தன்னை ஜாமீனில் விட வேண்டும் என ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!