ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரெய்டு… ரூ.35 கோடி மோசடி கண்டுபிடிப்பு

ஜெய்ப்பூர்:
ரூ.35 கோடி அளவுக்கு மோசடி நடந்தது ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் ரூ.35 கோடி அளவுக்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை நடத்தப்பட்ட அந்த நிறுவனங்கள், வரி கட்டாமலும், கணக்கு தாக்கல் செய்யாததும் தெரியவந்தது. மேலும் அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் ரூ.19 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!