ஜிசாட் -11 நாளை விண்ணில் பாய்கிறது… இஸ்ரோ திட்டம்

சென்னை:
நானை விண்ணில் பாய உள்ளது ஜிசாட் -11 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பான இஸ்ரோ இந்தியாவில் அதிவேக இணையதள சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கை கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டதால் ‘ஜிசாட்-11’ செயற்கைகோள் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டடது.

இந்நிலையில் நாளை (5ம் தேதி) பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ஜிசாட்-11 செயற்கைகோள் ‘ஏரைன்-5’ என்ற ராக்கெட் மூலம் நாளை (5ம் தேதி) அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!