ஜிப்மரில் நடக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடி ஒளிப்பரப்பு

புதுச்சேரி:
ஜிப்மரில் இன்று நடக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை ஜிப்மர் இயக்குனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“ஜிப்மர் மருத்துவமனையில் இன்று 21ம் தேதி காலை மருத்துவ மேற்படிப்பு (DM, MCh) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

இது முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கலந்தாய்வு வெளிப்படையாக நடப்பது தெரியவரும். இந்தக் கலந்தாய்வை ஜிப்மர் இணையதளத்தில் பார்க்கலாம். மருத்துவக் கலந்தாய்வு இந்திய அளவில் அரசு மருத்துவ நிறுவனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது இதுவே முதல் முறை. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் மருத்துவக் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்படும்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!