ஜி.எஸ்.டி., தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு

புதுடில்லி:
முடிவு… முடிவு… மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொண்டாடுவது என்று முடிவு செய்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

ஜூலை 1ம் தேதியை ஜி.எஸ்.டி., தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பலமுனை வரிகளை ஒழித்து, ஒரே வரி முறையான, ஜி.எஸ்.டி., 2017, ஜூலை, 1ல் அறிமுகமானது. நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்த கொள்கையாக கருதப்படும் ஜி.எஸ்.டி., வரியால், அமலில் இருந்த 12க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.

ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டு வரும் ஜூலை 1ம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது. இதனால் ஜூலை 1ம் தேதியை ஜி.எஸ்.டி., தினமாக கொண்டாட முடிவு செய்துள்ள மத்திய அரசு, அன்றைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

டில்லி அம்பேத்கர் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வரிதுறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வீடியோ கான்பரன்சில் உரையாற்ற உள்ளார் என்று டில்லி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!