ஜி.எஸ்.டி. நீக்கப்பட்டதா! கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குழப்பமோ குழப்பம்

சென்னை:
குழப்பத்தில் சிக்கி உள்ளனர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்… எதற்காக தெரியுங்களா?

தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 33 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சந்தா தொகையை அரசிடம் உரிமம் பெற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்கள், 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் பொதுமக்களிடம் வசூலித்து, ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 12ம் தேதி முதல் ஜிஎஸ்டி இணையதளத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி வரியை செலுத்த முடியவில்லை.
இது குறித்து கேபிள்டிவி ஆபரேட்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு கேபிள் டிவி நிறுவனம் ஜிஎஸ்டி இணையதளத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேபிள் டிவிக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடமும் விளக்கம் பெற முடியவில்லை. இது அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படவில்லை. இதனால் எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று புலம்பினர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!