ஜுனியர் அதிகாரிகள் நியமனத்தை ரத்து செய்ய திமுக வலியுறுத்தல்
சென்னை:
அரசு போக்குவரத்து கழகங்களில் ஜுனியர் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாமான்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட போக்குவரத்து கழகத்தில் ஜூனியர் அதிகாரிகளை நியமித்து மூட முயற்சி நடக்கிறது. போக்குவரத்து கழகத்தில் ஜூனியர் அதிகாரிகள் இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கழகத்தில் சீனியர்களை புறக்கணிப்பது அதிருப்தியை உருவாக்கி உள்ளது. ஜூனியர்கள் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில், மூத்த அதிகாரிகளை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களாக நியமிக்க வேண்டும்.
ஜூனியர் அதிகாரிகள் நியமனம் போக்குவரத்து கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா என சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S