ஜெ., சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவாரா சோனியா?

சென்னை:
சென்னைக்கு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தும் போது ஜெ., சமாதிக்கும் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கவிருக்கிறார் சோனியா காந்தி. அவரோடு, வட நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைக்கும் சோனியா, அங்கிருந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒ.எம்.சி.ஏ., மைதானத்துக்கு சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

முன்னதாக அவரை சென்னை கடற்கரையில் அமைந்திருக்கும் கருணாநிதி சமாதிக்கு அழைத்துச் சென்று மரியாதை செலுத்த, காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் கருணாநிதி சமாதியில் மட்டும் சோனியா மலர் தூவி மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது.

பின், அருகிலேயே இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியிலும் மரியாதை செலுத்தினால், அ.தி.மு.க.,வினர், காங்கிரஸ் தலைமை மீது ஈர்ப்பு கொள்வர் என சொல்லப்பட, அதற்கும் சோனியா ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல். ‘நேரம் இருக்கும்பட்சத்தில், இரு சமாதிகளுக்கும் சோனியா செல்வார்’ என, காங்கிரஸார் தெரிவிக்கின்றனர். இப்போது இதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!