ஜேம்ஸ் மெட்டிஸ், முன்கூட்டியே பதவி விலக வேண்டும்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜேம்ஸ் மெட்டிஸை, முன்கூட்டியே பதவி விலக வேண்டும் என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

68 வயதான ஜேம்ஸ் மெட்டிஸ் கடந்த வௌ்ளிக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தபோது, ட்ரம்புடனான கொள்கை வேறுபாட்டை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிவரை பதவி வகிக்குமாறு கூறியிருந்த ட்ரம்ப், தற்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்துள்ளார்.

இதனிடயே, பிரதி பாதுகாப்பு செயலாளராக இருந்த பெட்ரிக் ஷான்ஹான் (Patrick Shanahan), குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் புதிய ஆண்டில் அவர் உத்தியோகபூர்வமாக பதவி ஏற்கவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

போயிங் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும் பொறியியலாளருமான பெட்ரிக் ஷான்ஹான், 2017 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுடன் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!