ஜேர்மனியில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம்

ஜேர்மன் நாட்டின் சர்வதேச சமூகவியல் விஞ்ஞான சமாதானப் பல்கலைக்கழகத்தினால் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் இயக்குநரும் செல்வி பேரின்பநாயகி சிவகுரு அவர்களின் மாணவனுமாகிய நா.செந்தூர்ச் செல்வன் என்ற கலைஞருக்கே கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டம் வழங்கும் நிகழ்வு 21-07-2018 பெங்களூரில் நடைபெற்றுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் முதல் முதலாக கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர் நா.செந்தூர் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!