ஜேர்மனியில் 2ம் உலகப்போர் வெடிகுண்டு செயலிழக்கச்செய்யப்பட்டது….18500 பேர் வெளியேற்றம்

ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் பொது வீசப்பட்ட அபாயகரமான வெடிகுண்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது உலக நாடுகளின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் பல தற்போதும் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைத்து இருக்கின்றன. இவை அவ்வப்போது அகப்படுவது வழக்கம்.  முக்கியமாக இது போல ஜெர்மனியில் அடிக்கடி வெடிகுண்டுகள் கண்டெடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் ஜெர்மனியில் பிராங்பார்ட் என்ற பகுதியில், பெரிய வெடிகுண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடந்து வந்த கட்டுமான பணி ஒன்றுக்காக குழி தோண்டிய போது, இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  70 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனி மீது அமெரிக்கா வீசிய அந்த குண்டு வெடிக்காமல் இத்தனைக் காலமாக பூமிக்கு அடியில் புதையுண்டுள்ளது.

இதனால் வெடிகுண்டின் வீரியம் அறிந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். சுற்றிலும் மூன்று கிலோ மீட்டருக்கு இருக்கும் 18,500 பேர் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

பின், அந்த குண்டை பூமியிலிருந்து இருந்து எடுக்கும் பணி தொடங்கியது. அதன் எடை 500 கிலோ கிராம் ஆக இருந்ததாக மீட்பு பணி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விமானத்தில் இருந்து வீசப்பட்ட அந்த குண்டு, கோளாறு காரணமாக வெடிக்காமல் இருந்துள்ளது. இது குறித்து அறிந்தது அதனை செயலிழக்க செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்ய 2 மணி நேரம் ஆனது. நான்கு திறமையான வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மக்கள் அனைவரும் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

Sharing is caring!