ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் 2021 பதவி விலகுகிறார்

ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel), 2021ஆம் ஆண்டுடன் தமது பதவியிலிருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பிராந்தியத் தேர்தலில், அவரது கூட்டணி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது பதவிக் காலம் முடிந்ததன் பின்னர் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தமது கட்சியின் தலைவரைத் தெரிவுசெய்யும் தேர்தலிலும் தான் போட்டியிடுவதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஏஞ்சலா மெர்கல் 2000ஆம் ஆண்டு முதல் பதவியிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!