ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 23ம் திகதிக்கு

அமைச்சராக இருக்கும் போது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரக் கூற்றை சமர்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அமைச்சராக இருந்த போது 2010 முதல் 2013ம் ஆண்டு வரையான காலத்துக்குறிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரக் கூற்றை சமர்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!