டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையத்தை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்கு தலில் ஈடுபட்டதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தாக்குதலில் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் இரண்டு ஏவுகணைகளை வீசி உள்ளதாகவும், இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெயிட்ஸ் பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல், சிரிய ஆதரவு படைகளின் முகாம்கள் மற்றும் உளவுத்துறை தளங்கள், தளவாடங்கள் தலைமையகம், ஆயுதங்கள் சேமிப்பு தளங்கள் அனைத்தும் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே கிஸ்வாவில் இருப்பதாகவும், அதை குறி வைத்தே இஸ்ரேல் ஏவுகணையை வீசியிருப்பதாக வும், ஆனால், அவை இலக்கு தவறியதால் இழப்பு ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதல் சிரியா அரசு ஆதரவு படைகளை குறி வைத்து தாக்கப்பட்டிருக்கலாம் என்றும், சிரியாவில் போர் நிலவரங்களை மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதல்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இஸ்ரேல் தொடர்ந்து மறுத்துவிட்டது, ஆனால் சிரியாவுக்கு ஆதரவாக ஈரானிய இராணுவத்தினரின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று மீண்டும் இஸ்ரேல் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Sharing is caring!