டாக்டர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

மதுரை:
தற்காலிகமாக ஒத்தி வைப்பு… ஒத்திவைப்பு என்று அரசு டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.ங

சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி அரசு டாக்டர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு அளித்த பதிலில், ஒருநபர் கமிஷன் பரிந்துரைகளை அளித்துள்ளது. பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து சுகாதார செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.,17 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!