டிச.2ம் வாரத்தில் கூடுகிறது பார்லிமென்ட்?

புதுடில்லி:
டிசம்பர் மாதம் தொடங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் பார்லிமென்ட் கூடுகிறது என்பதால்தான்.

பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைந்தது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில வாரங்களில் அரசியல் விவாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. அப்போது பார்லி. குளி்ர்கால கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

இதில் வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மற்றும் மருத்துவ கவுன்சில் போன்றவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

2019-ல் பார்லி. லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வரும் டிசம்பரில் கூட உள்ள பார்லி. கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!