டிமாண்டு… டிமாண்டு… இம்ரான்கான் உருவ கேக்கிற்கு டிமாண்டு
இஸ்லாமாபாத்:
கேக்… கேக்… இம்ரான்கான் கேக்… இப்போ பாகிஸ்தானில் இதுதான் தற்போது பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது.
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கானின் உருவத்திலான கேக், பிரபலமாகி வருகிறது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இந்த கட்சி, தனது பிரதமர் வேட்பாளராக இம்ரான்கானை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், முதற்கட்டமாக 15 முதல் 20 அமைச்சர்களோடு கொண்ட அமைச்சரவையை அமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான்கானின் வெற்றியை கொண்டாடும் வகையில், அவரது உருவத்திலான கேக்குகளை கட்சியினர் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் இம்ரான் கான் கேக்கிற்கு மவுசு அதிகரித்து வருகிறது.
நன்றி- பத்மா மகன், திருச்சி