டிரம்புக்காக ஃபேஷன் நிறுவனத்தை மூடும் இவான்கா
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவான்கா, தான் நடத்தி வந்த ஃபேஷன் நிறுவனத்தை மூட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அதிபர் ஆட்சியில் வரி விதிப்பில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தொழில் தொடங்குவோர், ஏற்கெனவே உள்ள நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் ட்ரம்ப்பின் மகள் இவான்கா, தான் நடத்தி வந்த ஃபேஷன் நிறுவனத்தை இழுத்து மூட முடிவு செய்துள்ளதாக அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது. மிகவும் புகழ்பெற்றதாகவும் வணிக ரீதியாகவும் நல்ல நிலையில் இருக்கும் ஃபேஷன் தனது நிறுவனத்தை இவான்கா திடீரென மூடுவதாக கூறியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து அவர் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். ”வாஷிங்டனில், அடுத்த 17 மாதங்கள் கழித்து நான் மீண்டும் எனது நிறுவனத்தை மீண்டும் தொடங்குவேனா என்று எனக்குத தெரியாது. தற்போதைய நிலையில் எதிர்காலத்துக்கான பமியில் முழுக் கவனத்தையும் நான் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய சட்டங்களை கட்டுப்பாட்டுடன் இவான்காவின் நிறுவனம் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தொழிலில் இவான்கா சில கருத்துவேறுபாடுகளை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் தனது ஃபேஷன் நிறுவனத்தை மூடுவதாக பேசப்படுகிறது.
மேலும், நிறுவனத்தை மூடும் கையோடு தந்தை ட்ரம்ப்புக்கு உதவியாய் இருக்கும் வகையில், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக பணியாற்றி முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கபோவதாகவும் கூறப்படுகிறது.