டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு

டிரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவிட்டதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரது சந்திப்பு நிகழ்வு கடந்த 12ம் தேதி சிங்கப்பூரில் வெற்றி கரமாக நடந்து முடிந்தது. இந்த சந்திப்புக்கு சிங்கப்பூர் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்த நிகழ்வுக்கு மொத்தம் ரூ.81 கோடி செலவிட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. அதாவது சிங்கப்பூர் டாலர் மதிப்பில் 1.63 கோடி செலவிப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தொகை பாதுகாப்பு அம்சங்களுக்கே செலவானது என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிம் ஜான் உன்னுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒட்டல் அறையும் இந்த செலவுத் தொகையில் அடங்கியுள்ளது. முன்னதாக இந்த நிகழ்வுக்கு 2 கோடி சிங்கப்பூர் டாலரை செலவிட அந்நாடு திட்டமிட்டிருந்தது.

இந்த செலவுக்கு தொகைக்கு சமூக வலை தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!