டிரம்ப் பற்றி அனைத்தும் கூற தயார்…கொஹேன்
ரஷ்யாவுடனான சந்தேகத்திற்கிடமான தொடர்பு குறித்த விசாரணையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கொஹென் (Michael Cohen) தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் பற்றி தமக்குத் தெரிந்த அனைத்தையும் கூறுவதற்கு கொஹென் தயாராகவிருப்பதாக அவரது தனிப்பட்ட சட்டத்தரணி லேன்னி டேவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே கொஹென் இவ்வாறு கதைகளை உருவாக்கியிருக்கிறார் என ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.
அத்தோடு, தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டமைக்கு ரஷ்யாவுடன் எந்தக் கூட்டணியும் இருக்கவில்லை எனவும் ட்ரம்ப் மறுத்துள்ளார்.
மைக்கல் கொஹென், டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட சட்டத்தரணியாக ஒரு தசாப்த காலமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S