டில்லியில் பற்றி எரிந்த ஏடிஎம்… பரபரப்பு

புதுடில்லி:
நேற்று இரவு டில்லியில் உள்ள வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியின் கிழக்கு மாவட்டமான லஷ்மிநகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மிஷன் அறை உள்ளது. இங்கு நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி முற்றிலும் எரிந்து சாம்பலானது.

தவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம்மில் எத்தனை லட்சம் இருந்தது என்பது குறித்த தகவல் இல்லை. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!