டில்லியில் பிரதமரை சந்திக்கிறார் தெலுங்கானா முதல்வர்

புதுடில்லி:
டில்லியில் இன்று பிரதமரை சந்திக்க உள்ளார் தெலுங்கானா முதல்வர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி தேசிய அளவில், காங்., – பா.ஜ., அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில், சந்திரசேகர ராவ் ஈடுபட்டார்.

இது தொடர்பாக, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

இந்நிலையில் இன்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். பின்னர் உ.பி.மாநிலத்தில் சமாஜ்வாதியின் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!