டில்லியில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்

புதுடில்லி:
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் சராய் ரோஹில்லா பகுதியில், சாஸ்திரி நகரில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக, அவர்களுக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து, வங்கி கிளையில், 20க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் விசாரித்த போது, ‘டெபிட் கார்டு’ மூலம் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி கிளை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் விபரங்கள், ‘சைபர்’ பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, வங்கி கிளை மேலாளர் தெரிவித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!