டுவிட்டரில் தவறான பதிவு… திக்விஜய்சிங்கிற்கு கடும் கண்டனம்

புதுடில்லி:
டுவிட்டரில் தவறான பதிவு போட்டு இப்போது செம திட்டு வாங்கி வருகிறார் காங்., மூத்த தலைவர் திக்விஜய்சிங்.

காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங், சமூக வலைதளமான, ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள், பயன்படுத்தப்படாமல் துரு பிடித்து நிற்கும் படத்தை பதிவிட்டார். ‘இது, உ.பி.,யில் எடுக்கப்பட்ட படம்’ என்றும் குறிப்பு எழுதி இருந்தார்.

ஆனால், அந்தப் படம், ஆந்திராவில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து சமூக வலைதளத்தில் திக்விஜய் சிங்கை, பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!