டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று

அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

42 வயதான அவருக்கு இந்த வார ஆரம்பத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தினத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் தமது விடுமுறை இல்லத்தில் தனிமையிலிருப்பதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் இளைய மகன் 14 வயதான Barron Trump க்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர் மிக விரைவாக தொற்றிலிருந்து குணமடைந்திருந்ததை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!