டோக்லாம் பகுதியில் சீனா செய்கிறது சேட்டை… அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்:
ஆரம்பிச்சுட்டாங்களா… மீண்டும் தங்களின் சேட்டையை ஆரம்பிச்சுட்டாங்க என்று தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டோக்லாம் பகுதியில் சீனா மீண்டும் தனது கட்டுமான பணிகளை துவக்கிவிட்டதாக, அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான, அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி அலைஸ் வெல்ஸ், கூறியதாவது:
டோக்லாம் பகுதியில், சீனா மீண்டும் பணியை ஆரம்பித்துள்ளது. இது பூட்டானுக்கோ இந்தியவுக்கோ தெரிந்திருக்கவில்லை.

வடக்கு எல்லைகளை பாதுகாப்பதில் தீவிரம் காட்டும், இந்தியாவிற்கு இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சீனாவின் நடவடிக்கை, தென்சீன கடல் பகுதியில், அந்நாட்டின் கொள்கைகளை தான் நினைவுப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!