ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஜோர்ஜ் பபடோபௌலொஸ்க்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஜோர்ஜ் பபடோபௌலொஸ் (31 வயது) என்பவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதான குற்றச்சாட்டு குறித்து சட்டத்தரணி ரொபட் முல்லரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கைதான முதலாவது சந்தேகநபர் ஜோர்ஜ் ஆவார்.
எனினும், தன்னை மீட்டுக்கொள்ள இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் சந்தேகநபர் கேட்டுள்ளார்.
இந்தநிலையில், 2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதான குற்றச்சாட்டை மொஸ்கோ தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S