ட்ரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட விஷப்பொருளால் பதற்றம்..!!

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகைக்கு சென்றடைவதற்கு முன்பதாக – வழக்கமான சோதனையின் போது அக்கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிபர் ட்ரம்பை இலக்கு வைத்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இருப்பினும் ட்ரம்பின் நிர்வாகம் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு அப்போது அதிபராக பராக் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!