“தகவல் வெளியிடுவதில்லை… முடிவுகள் மட்டுமே தெரிவிக்கப்படும்”
புதுடில்லி:
ஆலோசனைகள் குறித்து மத்திய அரசு தகவல் வெளியிடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்கு தெரியுங்களா?
ஆர்பிஐ.,க்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் நலனுக்காக மட்டுமே ஆர்பிஐ உடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்பிஐ உடன் நடத்தப்படும் ஆலோசனைகள் குறித்து மத்திய அரசு தகவல் வெளியிடுவதில்லை. இறுதியாக எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மட்டுமே தகவல் வெளியிடப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S