தகுதி நீக்க எம்எல்ஏக்களின் மனு இன்று கோர்ட்டில் விசாரணை

புதுடில்லி:
இன்று விசாரணை… விசாரணை… தகுதி நீக்க எம்எல்ஏக்களின் மனுவை கோர்ட் விசாரிக்கிறது.

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (27ம் தேதி) விசாரிக்கவுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பால் இந்த புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு மூன்றாவது நீதிபதியிடம் விடப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர 17 பேர் சார்பிலும் மூத்த வக்கீல் விகாஸ் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தமிழக அரசியலில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!