தங்கப்பதக்கம் விருதுக்கு மகாத்மா காந்தி பெயர் பரிந்துரை

வாஷிங்டன்:
பரிந்துரை… பரிந்துரை செய்யப்பட்டுள்ளது காந்தியடிகளின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க பார்லி.,யால் வழங்கப்படும் மிக உயரிய ‘தங்கப்பதக்கம்’ விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பார்லி.,யின் சார்பில் சிறப்பாக சமூக தொண்டாற்றிய அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரப்படுத்தப்படும்.

இவ்விருது அரிதாக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க பார்லி., உறுப்பினர் கரோலின் மலோனே, அஹிம்சைக்காக போராடிய காந்தியடிகளுக்கு அமெரிக்காவின் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 23ம் தேதி தாக்கல் செய்த இத்தீர்மானத்தை ஆதரித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்லி., உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.

முன்னதாக இவ்விருது அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டவர்களான அன்னை தெரசா (1997), நெல்சன் மண்டேலா (1998), போப் இரண்டாம் ஜான் பால் (2000), தலாய் லாமா (2006), ஆங் சான் சூகி (2008), முஹமது யூனுஸ் (2010) மற்றும் ஷிமோன் பேரெஸ் (2014) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!