தஞ்சம்… தஞ்சம்… மீண்டும் மோடியிடம் தஞ்சம் அடையும் பிரசாந்த் கிஷோர்

புதுடில்லி:
தஞ்சம்… தஞ்சம்… மீண்டும் வந்து சேர்ந்தார் மோடியிடம் பிரசாந்த் கிஷோர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தல் வியூக நிபுணர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோடியிடம் தஞ்சமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் கில்லாடி என பெயர் பெற்றவர்.

கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார். பின்னர் பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி, வெற்றியை தேடிக் கொடுத்தார்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கி வரவுள்ளதால் பிரசாந்த கிஷோரின் தயவை மீண்டும் பா.ஜ. எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக கட்சி மூத்த நிர்வாகிகள் மூலம் பிரதமர் மோடியை பல கட்டங்களாக கிஷோர் சந்தித்ததாகவும், 2019 பொதுத் தேர்தலை சந்திக்க தயாராவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் 2019-ம் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் வியூகத்தினை பா.ஜ. பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!