தஞ்சையில் போட்டோ வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் அஞ்சலி

தஞ்சாவூர்:
தஞ்சையில் போட்டோ வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தஞ்சை போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கத்தினர் மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில் தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் நகர தலைவர் சுகுமாறன், செயலாளர் ஆனந்த், இணை செயலாளர் செந்தில், துணைத்தலைவர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு இந்திய தேசிய ராணுவ பேரவை வாரிசமைப்பினர் மாநில தலைவர் வேல்சாமி தலைமையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!